/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீயணைப்பு துறையினருக்குகுடியிருப்பு கட்ட பூமி பூஜை
/
தீயணைப்பு துறையினருக்குகுடியிருப்பு கட்ட பூமி பூஜை
தீயணைப்பு துறையினருக்குகுடியிருப்பு கட்ட பூமி பூஜை
தீயணைப்பு துறையினருக்குகுடியிருப்பு கட்ட பூமி பூஜை
ADDED : மார் 04, 2025 01:27 AM
தீயணைப்பு துறையினருக்குகுடியிருப்பு கட்ட பூமி பூஜை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு தீயணைப்பு நிலையம், நாமக்கல் ரோடு, சாலப்பாளையத்தில் உள்ளது. இங்கு பணிபுரியும் தீயணைப்பு வீரர்களுக்கு, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், மூன்று கோடியே, 22 லட்சத்து, 57,000 ரூபாய் மதிப்பீட்டில், 24,552 சதுரடி கொண்ட நிலத்தில், இரண்டு நிலைய அலுவலர் குடியிருப்பு, 12 தீயணைப்பு வீரர் குடியிருப்பு கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மூர்த்தி, நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு, சேலம் கோட்டை தீயணைப்புத்துறை துணை இயக்குனர் கல்யாணகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.