/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவி கழுத்தை அறுத்துகொலை; தப்பிய கணவர்
/
மனைவி கழுத்தை அறுத்துகொலை; தப்பிய கணவர்
ADDED : மார் 07, 2025 02:44 AM
மனைவி கழுத்தை அறுத்துகொலை; தப்பிய கணவர்
பள்ளிப்பாளையம்:பாதரை பகுதியில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, கணவன் தப்பியது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சியை சேர்ந்தவர் பாண்டியன், 35. இவரது மனைவி சித்ரா, 26. இவர்கள் பள்ளிப்பாளையம் அருகே வெப்படை அடுத்த பாதரை பகுதியில் வாடகை வீட்டில், வசித்து வருகின்றனர். இருவரும் வெப்படை பகுதியில் உள்ள நுாற்பாலையில் வேலை செய்கின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்ததால், அடிக்கடி தகராறு நடப்பதுண்டு. இந்நிலையில் நேற்று இரவு, 9:00 மணிக்கு கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், கத்தியால், சித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், பாண்டியன் தப்பி சென்று விட்டார். வெப்படை போலீசார் விசாரணை செய்து
வருகின்றனர்.