/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் மும்மொழி கொள்கைக்குஆதரவு,எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ADDED : மார் 07, 2025 02:47 AM
ராசிபுரத்தில் மும்மொழி கொள்கைக்குஆதரவு,எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்:மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில், பா.ஜ., கையெழுத்து இயக்கம் நடத்தியது. அதேசமயம் பழைய பஸ் ஸ்டாண்டில் கம்யூனிஸ்ட் சார்பில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, மார்ச், 5ம் தேதி தொடங்கி, மே 31 வரை கையெழுத்து இயக்கம் நடைபெறும் என பா.ஜ.,அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பா.ஜ., நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் மாவட்டத்தின் பெயர், வரிசை எண், பெயர், முகவரி, பாலினம், தொலைபேசி எண், முகவரி, கையொப்பம் என அனைத்து
விபரங்களும் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், நேற்று ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் கையெழுத்து இயக்கத்தை பொதுமக்கள் மத்தியில் பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
இதற்கான பேனரில் தமிழ் வாழ்க, சமக்கல்வி எங்கள் உரிமை என குறிப்பிட்டு முதல் கையெழுத்திட்டார். தொடர்ந்து பொதுமக்கள், பெற்றோர் விண்ணப்பங்களில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ., நகர தலைவர் வேலு, முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.அதேசமயம் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.ஒய்.எப்., மாணவர் அமைப்பு சார்பில் மும்மொழி கொள்கை மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து அருகில் இருந்த கனரா வங்கியை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் மோகன், துணைத்தலைவர் ஜெகநாதன், ரஞ்சித்குமார், சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட, 28 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.