/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தையின்மை குணப்படுத்தக்கூடியதேஆதிரா மருத்துவமனை டாக்டர் தகவல்
/
குழந்தையின்மை குணப்படுத்தக்கூடியதேஆதிரா மருத்துவமனை டாக்டர் தகவல்
குழந்தையின்மை குணப்படுத்தக்கூடியதேஆதிரா மருத்துவமனை டாக்டர் தகவல்
குழந்தையின்மை குணப்படுத்தக்கூடியதேஆதிரா மருத்துவமனை டாக்டர் தகவல்
ADDED : மார் 09, 2025 02:05 AM
குழந்தையின்மை குணப்படுத்தக்கூடியதேஆதிரா மருத்துவமனை டாக்டர் தகவல்
நாமக்கல்:''குழந்தையின்மை என்பது குணப்படுத்தக்கூடியது,'' என, நாமக்கல் ஆதிரா ஐ.வி.எப்., மருத்துவமனை டாக்டர் சரண்யா கூறினார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:குழந்தையின்மை என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று. உலகளவில் ஆண், 30 சதவீதம், பெண், 30 சதவீதம் அறியாத காரணங்கள், 40 சதவீதம் குழந்தையின்மையில் உள்ளது. ஆண்களில் குழந்தையின்மைக்கான காரணங்கள், வெரிகோசீல், 40 சதவீதம், ஸ்பெர்மின் தரம், 10 சதவீதம், கிருமி தொற்று, 10 சதவீதம், மரபணு குறைபாடு, 10 சதவீதம் மற்ற காரணங்கள், 30 சதவீதம். பெண்களில் குழந்தையின்மைக்கான காரணங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, 30 சதவீதம், கர்ப்பப்பை பாதிப்பு, 10 சதவீதம், கருக்குழாய் மற்றும் கருமுட்டை பாதிப்பு, 40 சதவீதம், மற்ற காரணங்கள், 20 சதவீதம். பி.சி.ஓ.எஸ்., எனப்படும் அதிக அளவிலான கருப்பை நீர்க்கட்டிகள், குழந்தையின்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குழந்தையின்மை என்பது குணப்படுத்தக்கூடியது. குழந்தையின்மை கண்டறியப்பட்ட தம்பதியர், சரியான நோய் கண்டறிதல் மற்றும் பிரத்யேக உயர் சிகிச்சைகளால் கருவுறுதல் சாத்தியமே. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட துறைதான், அஸிஸ்டேட் ரிபொடெக்டிவ் டெக்னாலஜி, ஏ.ஆர்.டி., எனப்படும். இந்த, ஏ.ஆர்.டி., சிகிச்சை மூலம், குழந்தையின்மைக்கான தீர்வு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.