/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உரம்பு வருதராஜ பெருமாள்கோவிலில் தேர் திருவிழா
/
உரம்பு வருதராஜ பெருமாள்கோவிலில் தேர் திருவிழா
ADDED : மார் 14, 2025 02:01 AM
உரம்பு வருதராஜ பெருமாள்கோவிலில் தேர் திருவிழா
நாமகிரிப்பேட்டை:உரம்பு, வருதராஜ பெருமாள் கோவிலில் நடந்த தீ மிதி மற்றும் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், உரம்பு ஊராட்சியில் வருதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மாசி மகம் நட்சத்திரத்தை ஒட்டி, இந்தாண்டு தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை தீ மிதி விழா நடந்தது. முதலில் கோவில் பூசாரி, கோவில் மாடு ஆகியவை தீ மிதித்து சென்றனர். இதையடுத்து, நேர்த்திக்கடன் செலுத்த குழந்தைகளை துாக்கி கொண்டு பெற்றோர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். தொடர்ந்து துலாபாரத்தில் பக்தர்கள் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
குழந்தைகளின் எடைக்கு எடை கரும்பு, வாழைப்பழம், வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். மதியம் தேர் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். டிராக்டர் உதவியுடன், கோவிலை சுற்றி முக்கிய வீதி வழியாக சென்ற தேர் மாலை நிலை சேர்ந்தது.