/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சு போட்டி
/
சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சு போட்டி
ADDED : மார் 14, 2025 02:03 AM
சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சு போட்டி
ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த, பாச்சலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி நடந்தது. 30-க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த, 480-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ, ராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போட்டியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து பேசினார்.
எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது: ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தத்துவத்தை, மனித குலத்திற்கு அளித்து மொழி சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த மொழி தமிழ் மொழி. தாய் மொழியின் முக்கியத்துவத்தை அறிந்த ரஷ்யா, ஜெர்மனி நாட்டினர் இன்றளவும் தாய் மொழியில் தான் கல்வி கற்பித்து வருகின்றனர். ஆங்கிலம் என்பது தொடர்பு மொழி மட்டுமே.
இவ்வாறு பேசினார்.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கான்ஸ்ன்டைன் ரவீந்திரன், முனைவர் ஹாஜாகனி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, தனியார் கல்லுாரி நிறுவனர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.