தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மக்காச்சோளம், நிலக்கடலை பயிரில்செயல்விளக்க திடல் வயல் விழா

மக்காச்சோளம், நிலக்கடலை பயிரில்செயல்விளக்க திடல் வயல் விழா

மக்காச்சோளம், நிலக்கடலை பயிரில்செயல்விளக்க திடல் வயல் விழா


ADDED : மார் 19, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மக்காச்சோளம், நிலக்கடலை பயிரில்செயல்விளக்க திடல் வயல் விழா

மல்லசமுத்திரம்:சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் தமிழக வேளாண்மை பல்கலை மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் சார்பில், மக்காச்சோளம், நிலக்கடலை பயிரில் முதல் நிலை செயல் விளக்க திடல் வயல் விழா, மல்லசமுத்திரம் வட்டாரம், கருங்கல்பட்டி அக்ரஹாரம் கிராமத்தில் நடந்தது. இதில், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் திட்ட விஞ்ஞானி நடராஜன், விவசாயிகளுக்கு திட்ட விளக்க உரை ஆற்றினார். பேராசிரியர் மற்றும் தலைவர் வெங்கடாசலம், நிலக்கடலையில் உயர் விளைச்சல் ரகங்கள், உயர் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

பேராசிரியர் அருட்செந்தில், பயிர் மரபியல் துறை ஆமணக்கு வீரிய ஒட்டு ரகங்கள் மற்றும் இவ்வாராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்க உரை ஆற்றினார். உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமாக பேசினார். வயல் விழா நிகழ்ச்சியில், மரவள்ளி ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ஆமணக்கு ரகங்கள், பயிர் வளர்ச்சி, ஊக்கிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us