/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராஜ வாய்க்காலில் நீர் திறப்புபாசன விவசாயிகள் மகிழ்ச்சி
/
ராஜ வாய்க்காலில் நீர் திறப்புபாசன விவசாயிகள் மகிழ்ச்சி
ராஜ வாய்க்காலில் நீர் திறப்புபாசன விவசாயிகள் மகிழ்ச்சி
ராஜ வாய்க்காலில் நீர் திறப்புபாசன விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 20, 2025 01:39 AM
ராஜ வாய்க்காலில் நீர் திறப்புபாசன விவசாயிகள் மகிழ்ச்சி
ப.வேலுார்:-ராஜ வாய்க்காலில் பராமரிப்பு பணி நிறைவடைந்ததால், நேற்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ப.வேலுார் அருகே, ஜேடர்பாளையம் பகுதியில் படுகை அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, 81 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த படுகை அணையின் இடதுபுறத்தில், ராஜ வாய்க்கால் தொடங்குகிறது. வாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக, கடந்த பிப்., 20ல் தண்ணீர் நிறுத்தப்பட்டது. கடந்த, 26 நாட்களாக நடந்த பராமரிப்பு பணி நிறைவடைந்த நிலையில், நேற்று விவசாய பாசன வசதிக்காக ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
விழாவில், ப.வேலுார் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வினோத் குமார், நன்செய் இடையாறு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், விவசாயிகள் பெரியசாமி, வையாபுரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராஜ வாய்க்காலை நம்பி காவிரி கரையோர பகுதிகளான ப.வேலுார், ஜேடர்பாளையம், பரமத்தி, பிலிக்கல்பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், பொய்யேரி, நன்செய்இடையார் விவசாயிகள் வாழை, கரும்பு, வெற்றிலை, தென்னை, மரவள்ளி சாகுபடி செய்து வருகின்றனர்.
ராஜ வாய்க்கால் மூலம், 16,150 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.