/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில்செயல்முறை பயிலரங்கு நிகழ்ச்சி
/
தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில்செயல்முறை பயிலரங்கு நிகழ்ச்சி
தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில்செயல்முறை பயிலரங்கு நிகழ்ச்சி
தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில்செயல்முறை பயிலரங்கு நிகழ்ச்சி
ADDED : மார் 27, 2025 01:34 AM
தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில்செயல்முறை பயிலரங்கு நிகழ்ச்சி
நாமக்கல்:நாமக்கல், தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம், டாக்டர் குரூஸ் பெயின் அண்ட் பாலியாட்டிவ்கேர் இணைந்து, வலி மருத்துவம் மற்றும் தீவிர சிகிச்சை செயல்முறை பயிலரங்கு நிகழ்ச்சியை, இரண்டு நாட்கள் நடத்தின.
இதில், தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு முதுகெலும்பு, சாக்ரோலியாடிக் மூட்டு, முழங்கால் நுரையீரல், வயிறு, கழுத்து, முள்ளந்தண்டு ஆகியவற்றின் உடற்கூறியல், இதயத்தின் அமைப்பு, செயல்பாடுகளை அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் கண்டறிவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தலைச்சிறந்த மருத்துவர்கள் பயிற்றுவித்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பயிற்சி பெற்றனர்.
தங்கம் மருத்துவமனையில், நுரையீரல் புற்றுநோயை செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு அறியும் செயலி, இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என, தங்கம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் குழந்தைவேலு தெரிவித்தார். டாக்டர்கள் குருமூர்த்தி, விஸ்வநாதன், அரவிந்தகுமார் தங்கதுரை மற்றும் தங்கம் குழும டாக்டர்கள் கலந்துகொண்டனர்.