தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில்பூங்கா அமையுமா: மக்கள் எதிர்பார்ப்

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில்பூங்கா அமையுமா: மக்கள் எதிர்பார்ப்

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில்பூங்கா அமையுமா: மக்கள் எதிர்பார்ப்


ADDED : மார் 30, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில்பூங்கா அமையுமா: மக்கள் எதிர்பார்ப்பு

கரூர்:கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை பகுதியில், பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம், பெரிய ஆண்டாங்கோவிலில், அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன், தடுப்பணை கட்டப்பட்டது. ஆற்றில் தண்ணீர் செல்லும் காலக்கட்டத்தில், தடுப்பணை ரம்மியமாக காட்சியளிக்கும்.

இதனால், கரூர் டவுன், சுக்காலியூர், திருகாம்புலியூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், வெள்ளியணை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு செல்கின்றனர்.

ஆனால், தடுப்பணை பகுதியில் பூங்கா வசதி இல்லாததால், பொதுமக்கள் சிறிது நேரத்தில் திரும்பி சென்று விடுகின்றனர். கரூர், க.பரமத்தி, தென்னிலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில், பெரியளவில் பூங்கா வசதிகள் இல்லை.

கரூர் கொளந்தாகவுண்டனுாரில் கடந்த, 2012ல், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்க பணிகள் துவக்கப்பட்டது. தற்போது, அந்த இடத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நெரூரில் உள்ள சுற்றுலா பூங்கா, போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கரூர் நகரப்பகுதியில் உள்ள ஆசாத் பூங்கா சிறிய இடத்தில் செயல்படுகிறது. இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுது போக்குக்காக செல்ல உரிய இடம் இல்லை.

இதனால், கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, இரண்டு கி.மீ., துாரத்தில் உள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை பகுதியில் பூங்கா அமைத்தால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும். பெரிய ஆண்டாங்கோவில் கிராமப்பகுதிகளும், பொருளாதார வளர்ச்சியடையும். இதனால், தடுப்பணை பகுதியில், காலியாக உள்ள இடத்தில், பூங்கா அமைக்க சுற்றுலா துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us