/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டா நிலத்தில் நடுகல் விவகாரம்பேச்சுவார்த்தைக்கு பின்னும் இழுபறி
/
பட்டா நிலத்தில் நடுகல் விவகாரம்பேச்சுவார்த்தைக்கு பின்னும் இழுபறி
பட்டா நிலத்தில் நடுகல் விவகாரம்பேச்சுவார்த்தைக்கு பின்னும் இழுபறி
பட்டா நிலத்தில் நடுகல் விவகாரம்பேச்சுவார்த்தைக்கு பின்னும் இழுபறி
ADDED : ஏப் 01, 2025 01:53 AM
பட்டா நிலத்தில் நடுகல் விவகாரம்பேச்சுவார்த்தைக்கு பின்னும் இழுபறி
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு சமுதாயத்தினர், அவர்களது முன்னோர்களின் நினைவாக, மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவரின் பட்டா நிலத்தில், நினைவுக்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு நில உரிமையாளர் மற்றும் அவரது சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நினைவு கற்களை அகற்றக்கோரி போலீசில் புகாரளித்தனர். இந்த பிரச்னை தீராத நிலையில், மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் எனக்கூறி, 75க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதற்கு எதிராக, நில உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்களும் திரண்டதால் மோதல் சூழல் உருவானது.
இதையடுத்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில் நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமுக தீர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளிடம், ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி நடக்காமல், நிலம் ஒதுக்கி தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், பணியை முடிக்காமல் திரும்பி சென்றனர். இதனால் இந்த பிரச்னை தொடர்ந்து இழுபறி நிலையிலேயே இருந்து வருகிறது.