/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டைரக்ட் டூ டிவைஸ் உரிமம்எம்.பி., ராஜேஸ்குமார் கேள்வி
/
டைரக்ட் டூ டிவைஸ் உரிமம்எம்.பி., ராஜேஸ்குமார் கேள்வி
டைரக்ட் டூ டிவைஸ் உரிமம்எம்.பி., ராஜேஸ்குமார் கேள்வி
டைரக்ட் டூ டிவைஸ் உரிமம்எம்.பி., ராஜேஸ்குமார் கேள்வி
ADDED : ஏப் 04, 2025 12:59 AM
டைரக்ட் டூ டிவைஸ் உரிமம்எம்.பி., ராஜேஸ்குமார் கேள்வி
நாமக்கல்:மலை கிராமங்களுக்கு தகவல் தொடர்பை வழங்கும், டைரக்ட் டூ டிவைஸ் உரிமம் குறித்து எம்.பி., ராஜேஸ்குமார் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லியில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.பி., ராஜேஸ்குமார் கேள்வி நேரத்தில் பேசியதாவது: மலை கிராமங்கள், பழங்குடியின மக்கள், தொலைதொடர்பு வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு டைரக்ட் டு டிவைஸ் தொழில்நுட்பம் சிறந்ததாக இருக்கும். இதற்கான டிரான்ஸ்மீட்டர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ள நிலையில், இந்த உரிமங்களை தனியாருக்கு வழங்கினால், அவர்கள் வியாபார நோக்கில் செயல்படுவார்களே தவிர மக்களுக்கு சேவை வழங்கும் எண்ணத்தில் செயல்பட மாட்டார்கள்.
இதற்கு மத்திய இணை அமைச்சர் ஜோதிராவ் சிந்தியா பதில் அளித்து பேசியதாவது: டைரக்ட் டூ டிவைஸ் திட்டத்தின் கீழ், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மட்டுமே அந்த தொழில்நுட்பம் வழங்கப்படும். விரைவில் அதன் சேவை துவங்கும் என்று பதிலளித்தார்.
முன்னதாக நேரமில்லா நேரத்தில் ராஜேஸ்குமார் பேசுகையில்,'தமிழ்நாட்டில் 2025 ஏப்., 1ம் தேதி நிலவரப்படி, கடந்த நான்கு மாதங்களாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஊதியமாக, 4,034 கோடி நிதி மத்திய ஒஅரசிடம் நிலுவையில் உள்ளது. இதை நம்பியுள்ள, லட்சக்கணக்கான ஏழை கிராமப்புற குடும்பங்களுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள, 4,034 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

