/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சீரான குடிநீர் வழங்க கோரிமறியல் போராட்ட முயற்சி
/
சீரான குடிநீர் வழங்க கோரிமறியல் போராட்ட முயற்சி
ADDED : ஏப் 11, 2025 01:44 AM
சீரான குடிநீர் வழங்க கோரிமறியல் போராட்ட முயற்சி
சேந்தமங்கலம்:சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி, சாலை மறியல் போரட்டம் நடத்த முயன்றவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சேந்தமங்கலம் அருகே சிவியாம்பளையம் பஞ்., அம்மன் நகரில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு கடந்த, 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கொண்டமநாய்க்கன்பட்டி மேடு அருகே, சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
அங்கு வந்த சேந்தமங்கலம் போலீசார், பொது மக்களை சமாதானப்படுத்தினர். பின்னர், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் அனிதா, பி.டி.ஏ., பிரபாகரன் ஆகியோர், அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர்
வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.

