/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அம்பேத்கர் பிறந்தநாள் விழாபேனரை கிழித்த வாலிபர் கைது
/
அம்பேத்கர் பிறந்தநாள் விழாபேனரை கிழித்த வாலிபர் கைது
அம்பேத்கர் பிறந்தநாள் விழாபேனரை கிழித்த வாலிபர் கைது
அம்பேத்கர் பிறந்தநாள் விழாபேனரை கிழித்த வாலிபர் கைது
ADDED : ஏப் 16, 2025 01:21 AM
அம்பேத்கர் பிறந்தநாள் விழாபேனரை கிழித்த வாலிபர் கைது
நாமகிரிப்பேட்டை:அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நாமகிரிப்பேட்டை யூனியன், மங்களபுரம் பஸ் ஸ்டாப்பில், பொதுமக்கள் சார்பில் அம்பேத்கர் படத்துடன் பிறந்தநாள் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை, பிறந்தநாள் கொண்டாட வந்த பொதுமக்கள், அம்பேத்கர் பேனர் கிழிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அம்பேத்கரின் பேனரை கிழித்த நபரை உடனடியாக கைது செய்யக்கோரி, 50க்கு மேற்பட்டோர், ஆத்துார் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புகார்படி, அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை, மங்களபுரம் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த குகன், 25, என்ற வாலிபர், போதையில் பேனரை கிழித்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.