/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோளக்காடு பழங்குடியினர் சந்தையில் பலாப்பழம் விற்பனை சூடுபிடிப்பு
/
சோளக்காடு பழங்குடியினர் சந்தையில் பலாப்பழம் விற்பனை சூடுபிடிப்பு
சோளக்காடு பழங்குடியினர் சந்தையில் பலாப்பழம் விற்பனை சூடுபிடிப்பு
சோளக்காடு பழங்குடியினர் சந்தையில் பலாப்பழம் விற்பனை சூடுபிடிப்பு
ADDED : ஆக 10, 2025 12:49 AM
சேந்தமங்கலம், கொல்லிமலையில், மிளகு, அன்னாசி, பலா, வாழை, காபி உள்ளிட்ட வேளாண் பொருட்களும் அதிகளவு கிடைக்கின்றன. இதில், பலாப்பழம் பார்பதற்கு சிறியதாக இருந்தாலும், சுவை அதிகமாக இருக்கும். இதனால், கொல்லிமலை பலாப்பழம் என்றாலே சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கிச்செல்வர். இதன் சீசன் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதத்தில், வைகாசியில் தொடங்கி, ஆடி மாதம் வரை இருக்கும். இந்த மாதங்களில் பலா அறுவடை அதிகமாக இருக்கும். ஆவணி மாதம் கொல்லிமலை பலா சீசன் முடிந்து விடும். அதன்பின் பழம் கிடைக்காது. இந்தாண்டு சில வாரங்களுக்கு முன், பலா அறுவடை தொடங்கி விட்டது. செம்மேடு, சோளக்காடு, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாயிகள் பழங்களை
கொண்டுவந்து விற்று வருகின்றனர்.
தமிழகத்தில், பண்ருட்டிக்கு அடுத்தபடியாக கொல்லி மலையில் தான் அதிகளவில் பலா பழங்கள் சாகுபடி செய்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலா பழங்களை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். 50 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை பலாப்பழம் விற்பனை செயயப்படுகிறது.
நாமக்கல், சேலம் மாவட்ட பழ வியாபாரிகள், கொல்லிமலை பலாப்பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பலாப்பழங்களின் விளைச்சல் அதிகரித்து காணப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.