/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ--ஜியோ ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ--ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 17, 2025 02:13 AM
நாமக்கல், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ--ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி தலைமை வகித்தார். அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்களித்து, ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.