/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோடை பண்பலை 100.5-ன் 25-ம் ஆண்டு தொடக்க விழா
/
கோடை பண்பலை 100.5-ன் 25-ம் ஆண்டு தொடக்க விழா
ADDED : ஆக 13, 2024 06:26 AM
மல்லசமுத்திரம்: மகேந்ரா கல்வி நிறுவனங்கள், அகில இந்திய வானொலி, மகேந்ரா பண்பலை-90.4 சமுதாய வானொலி ஆகியவை இணைந்து, கோடை பண்பலை, 100.5ன், 25ம் ஆண்டு தொடக்க விழா, மல்லசமுத்திரம் மகேந்ரா கல்வி நிறுவனத்தில் நடத்தின.
மகேந்ரா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் பாரத்குமார் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கோடை பண்பலை நிலைய இயக்குனர் ஜான் பிரதாப் குமார், அனைவரையும் வர-வேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, பேராசிரியர் ஞானசம்பந்தன், பாடலாசிரியர் அறிவுமதி, மக்கள் இசை பாடகர்கள் செந்தில்-கணேஷ், ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கோடை பண்பலை 100.5ன், 25ம் ஆண்டு துவக்க விழாவான வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில், 25 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்-பட்டது. மேலும், அறிவிப்பாளர்கள் எழுதிய நுால்கள் வெளியி-டப்பட்டன. மேலும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மகேந்ரா கல்வி குழும கல்லுாரி முதல்வர்கள் மஹேந்ராகவுடா, இளங்கோ, செந்தில்குமார், புல முதல்வர்கள் சண்முகம், நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

