sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்டுப்பாட்டை இழந்த லாரி பொம்மைகடைக்குள் புகுந்ததில் 5 பேர் படுகாயம்

/

கட்டுப்பாட்டை இழந்த லாரி பொம்மைகடைக்குள் புகுந்ததில் 5 பேர் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த லாரி பொம்மைகடைக்குள் புகுந்ததில் 5 பேர் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த லாரி பொம்மைகடைக்குள் புகுந்ததில் 5 பேர் படுகாயம்


ADDED : ஏப் 06, 2025 01:07 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டுப்பாட்டை இழந்த லாரி பொம்மைகடைக்குள் புகுந்ததில் 5 பேர் படுகாயம்

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே, கட்டுப்பாட்டை இழந்த லாரி, பொம்மை கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி, ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துாரில் இருந்து ஈரோட்டிற்கு ஸ்டார்ச் மாவு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, நேற்று காலை, 10:00 மணிக்கு புறப்பட்டது. தம்மம்பட்டி அடுத்த நாகியம்பட்டியை சேர்ந்த டிரைவர் அஜித், 27, லாரியை ஓட்டினார். நாமகிரிப்பேட்டைக்கு முன்பாக, மெட்டாலா கணவாய் வழியாக லாரி சென்றுகொண்டிருந்தது. மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் இன்று திருவிழா என்பதால், கோவிலை சுற்றி பொம்மை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

கோவிலை தாண்டி சென்று கொண்டிருந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் அமைக்கப்பட்டிருந்த பொம்மை கடைக்குள் புகுந்து இடித்து நின்றது. இதில், அருகில் பேக்கரியில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆயில்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் உதயகுமார், 41, கண்ணன் மனைவி ரம்யா, 23, மெட்டாலாவை சேர்ந்த பெரியசாமி மகள் மோனிஷா உள்பட, ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். மேலும், மூன்று டூவீலர்கள் சேதமாகின. அங்கிருந்த பொதுமக்கள், ஐந்து பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர், இரண்டு மணி நேரம் போராடி கடைக்குள் புகுந்த லாரியை, கிரேன் உதவியுடன் வெளியே எடுத்தனர். இந்த விபத்தால், இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிகக்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us