/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் கும்பாபிஷேகத்தில் நகை திருடிய 5 பேர் கைது
/
கோவில் கும்பாபிஷேகத்தில் நகை திருடிய 5 பேர் கைது
ADDED : ஆக 31, 2024 12:46 AM
ப.வேலுார்:: பரமத்தி அருகே, நல்லுார் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை திரு-டிய நபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பரமத்தி அருகே, திடுமல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்-ளது. இங்கு நேற்று காலை, 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்-தது. விழாவில் செம்மடை கிராமத்தை சேர்ந்த லட்சுமி, 70, என்-பவர் வந்துள்ளார். அப்போது
அவரை சுற்றி பெண்கள் நின்று கொண்டு, லட்சுமி கழுத்தில் இருந்த, 6.5 பவுன் நகையை திரு-டினர். நகை காணவில்லை என லட்சுமி கூச்சலிட்டபோது, அருகில் இருந்த நான்கு பெண்கள் காரில் தப்பி ஓடினர்.
அங்கி-ருந்தவர்கள் சந்தேகப்பட்டு, காரை நிறுத்தி நான்கு பெண்கள், டிரைவர் என ஐந்து பேரை நல்லுார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த ராசாமணி, 70, உமா, 57, கார் டிரைவர் முத்து, 58, பெரம்பலுார் புவனா, 45, செல்வி, 65, என தெரியவந்தது. திருடிய நகையை கைப்பற்றி நல்லுார் போலீசார் ஐந்து பேரையும்
கைது செய்தனர்.