/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2024 06:16 AM
நாமக்கல்: கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொது சங்கத்தினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். நிறுவன தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அதில், கட்டுமான பொருட்கள் விலைவா-சியை கட்டுப்படுத்த வேண்டும். எம்.சாண்ட் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ராசிபுரத்தில் உள்ள புது பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி-யுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் உள்பட பலர்
பங்கேற்றனர்.