/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருகன் கோவில்களில் சஷ்டி விழா கோலாகலம்
/
முருகன் கோவில்களில் சஷ்டி விழா கோலாகலம்
ADDED : செப் 10, 2024 06:09 AM
ப.வேலுார்: சஷ்டியையொட்டி, ப.வேலுார், சுல்தான்பேட்டையில் உள்ள பக-வதி அம்மன் கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. அதேபோல், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோவிலில் சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ர-மணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்-டவர், பொத்தனுார்
பச்சைமலை முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அனிச்சம்பாளையத்தில் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவே-லீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள, 34 அடி உயரம் கொண்ட ஆறுமுக கடவுள் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. சஷ்டி சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

