/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழக துணை முதல்வராக உதயநிதி பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம்
/
தமிழக துணை முதல்வராக உதயநிதி பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம்
தமிழக துணை முதல்வராக உதயநிதி பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம்
தமிழக துணை முதல்வராக உதயநிதி பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 04, 2024 09:30 AM
நாமக்கல்: 'தமிழக துணை முதல்வராக உதயநிதியை நிய-மனம் செய்ய வேண்டும்' என, பொது உறுப்பி-னர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது.
கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், பொது உறுப்-பினர்கள் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாநகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளரும், நாமக்கல் மாவட்ட மத்-திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், கூட்ட பொருள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், நாமக்கல் நகராட்சியை, மாநகராட்-சியாக தரம் உயர்த்தியதற்கு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, நேரு, மதி-வேந்தன், மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்-பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை-வாய்ப்பு வழங்கும் வகையில், 'சிப்காட்' தொழிற்-பூங்கா அமைக்க அரசு ஆணை வழங்கியதற்கு, தமிழக தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்-றிய, நகர, டவுன் பஞ்.,களில் வரும், 8 முதல், 14 வரை நடக்கும் பொது உறுப்பினர் கூட்டங்களில், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், நாமக்கல் சட்டசபை தொகுதியில், 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. நாமக்கல் நகருக்கு, 194 கோடி ரூபாய் மதிப்பில், புறவழிச்-சாலை பணிகள் நடந்து வருகின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, நாமக்கல் - பரமத்தி சாலை செலம்பகவுண்டர் பூங்காவில் அவரது முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அதனை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க வேண்டும்.தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை, துணை முதல்வராக நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.