தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி

பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி

பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி


ADDED : பிப் 09, 2024 11:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 11:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று மகளிர் திட்டம் சார்பில், 939 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, 11,592 மகளிருக்கு, 68.37 கோடி ரூபாய் வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கி எம்.பி.,ராஜேஸ்குமார் பேசியதாவது:

மகளிருக்கு இலவச பஸ் பயணம், மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில, 1,000 ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். புதுமை பெண் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 15,725 மாணவிகள் பயன்பெறுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கான திட்டங்களை செயல் படுத்துவதில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மேலும், பெண்கள் சுய தொழில் தொடங்கிட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 68.37 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்திடும் பொருட்களை விற்பனை செய்திட வாகனம் வழங்கப்படவுள்ளது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி, பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

முன்னதாக, எம்.பி., ராஜேஸ்குமார் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.

நாமக்கல் சேர்மன் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us