/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் தொடர்ந்துஆடுகள் உயிரிழப்பால் கவலை
/
கொல்லிமலையில் தொடர்ந்துஆடுகள் உயிரிழப்பால் கவலை
ADDED : ஜன 15, 2025 12:24 AM
கொல்லிமலையில் தொடர்ந்துஆடுகள் உயிரிழப்பால் கவலை
சேந்தமங்கலம், :கொல்லிமலையில், 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்
நிலையில், கடந்த மாதம் குண்டூர் நாடு பஞ்., வளப்பூர் நாடு பஞ்., அரியூர் நாடு பஞ்., ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளை மட்டும் மர்ம விலங்கு கடித்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வனத்துறையினர், 'டிராக் கேமரா' மூலம் கண்காணித்தனர். அப்போது, ஆடுகளை, பட்டியில் சென்று நாய்கள் கடித்துவிட்டு வெளியேறும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தன.
இதையடுத்து, அந்த நாய்களை பிடிக்க, மதுரையில் இருந்து நாய் பிடிக்கும் பணியாளர்களை அழைத்து வந்து, 3 பஞ்.,ல் உள்ள தெருநாய்களை பிடித்து வருகின்றனர். இதுவரை, 55 தெருநாய்கள் பிடிபட்டுள்ள நிலையிலும், கடந்த, 9ல், 4 ஆடு, 10ல், 3 ஆடு, 13ல், 4ஆடுகள் நாய்கள் கடித்து
உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை
கவலையடைய செய்துள்ளது.