ADDED : ஜன 15, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில்மோதி வாலிபர் பலி
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றினர். இறந்தவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், இவருக்கு, 30 வயதிருக்கும் என, போலீசார் தெரிவித்தனர். பெயர், விலாசம் உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.