/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சங்கடஹர சதுர்த்திவிநாயகருக்கு பூஜை
/
சங்கடஹர சதுர்த்திவிநாயகருக்கு பூஜை
ADDED : ஜன 18, 2025 01:16 AM
சங்கடஹர சதுர்த்திவிநாயகருக்கு பூஜை
நாமக்கல்,:சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நாமக்கல் பிரதான சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கழநீர் பிள்ளையார் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. மாலை, 7:00 மணிக்கு பிள்ளையாருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* நாமக்கல் - திருச்செங்கோடு சாலை, ஓம் சக்தி விநாயகர் ஆலயத்தில், நேற்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
* நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.