ADDED : ஜன 22, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு திட்டப்பணி: கலெக்டர் ஆய்வு
புதுச்சத்திரம்,:புதுச்சத்திரம் யூனியன், லக்காபுரத்தில், 39.95 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம செயலக அலுவலகம்; காரைக்குறிச்சியில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 82.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டி.எஸ்.,ரோடு முதல் காரைக்குறிச்சி புதுார் வழியாக தாத்தையங்கார்பட்டி வரை புதிதாக தார்சாலை அமைக்கும் பணி; செட்டிப்பாளையம், லக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் கட்டட பணி என, 1.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் திட்டப்பணிகளை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.