/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவிக்கு தாலி கட்டியவாலிபருக்கு 'போக்சோ
/
மாணவிக்கு தாலி கட்டியவாலிபருக்கு 'போக்சோ
ADDED : ஜன 25, 2025 01:17 AM
மாணவிக்கு தாலி கட்டியவாலிபருக்கு 'போக்சோ
'ராசிபுரம், : நாமகிரிப்பேட்டை யூனியன், வரகூர்கோம்பை கீரைக்காட்டை சேர்ந்த தங்கராஜ் மகன் மகேந்திரன், 23; ஐ.டி.ஐ., முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும், பெரியகோம்பையை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன், மாணவியின் கழுத்தில், மகேந்திரன் தாலி கட்டியுள்ளார். மாணவியின் கழுத்தில் தாலி இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, மகேந்திரன் தாலி கட்டிய விபரத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்
பதிந்து மகேந்திரனை கைது செய்தனர்.