/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்றவர் விபரீதம்
/
அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்றவர் விபரீதம்
ADDED : ஜன 25, 2025 01:19 AM
அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்றவர் விபரீதம்
சேந்தமங்கலம், :சேந்தமங்கலம், பச்சுடையாம்பட்டிபுதுாரை சேர்ந்தவர் பூசமணி, 47; கூலி வேலை செய்து வந்தார். தினமும் மது குடித்துவிட்டு, மனைவி சித்ராவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மனைவி சித்ரா, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனியாக வீட்டில் வசித்து வருகிறார். பூசமணி, தாய் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மருத்துவமனையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.