/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 01, 2025 12:45 AM
அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, பருத்திப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்வ விநாயகர், அழகு முத்து மாரியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கடந்த, 25ல் விழா தொடங்கியது. நேற்று காலை, 4:30 முதல், 6:00 மணி வரையில் மங்கள இசையுடன் மஹா கணபதி ஹோமம் தொடங்கியது. பின், காவிரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இன்று காலை, 8:00 மணி முதல் இரவு வரை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை நடக்க உள்ளது. நாளை அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், காலை, 7:15 மணிக்கு, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கவுள்ளது. 7:25 மணிக்குமேல் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. தொடர்ந்து, மூலவருக்கு மஹா தீபாராதனையும், கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள கூடத்தில் அன்னதானமும் நடக்க உள்ளது.