/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு
ADDED : பிப் 01, 2025 12:46 AM
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., கழிவுநீர் செல்ல வழியின்றி விவசாய நிலத்திற்குள் செல்வதாக புகார் எழுந்தது. இதனால், விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, டவுன் பஞ்., நிர்வாகம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இதையேற்று, சில தினங்களுக்கு முன், காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், காளப்பநாய்க்கன்பட்டி அருகே உள்ள ராசாகவுண்டனுாரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது எனக்கோரி, 40க்கும் மேற்பட்டோர் டவுன் பஞ்., அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். இதனால், டவுன் பஞ்., அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.