ADDED : பிப் 09, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்ஜெட் நகல்எரிப்பு போராட்டம்
நாமக்கல் :மத்திய பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, இ.கம்யூ., கட்சியினர், நாமக்கல் பூங்கா சாலையில், பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார். மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் கொழந்தான், நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, செல்வராஜ், சுகுமார், மணிமாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.

