ADDED : பிப் 13, 2025 01:36 AM
சுப்பிரமணிய சுவாமிதிருவீதி உலா
ப.வேலுார்:-கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, பிராந்தகத்தில் உள்ள, 34 அடி உயரம் கொண்ட ஆறுமுக கடவுள் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருளி, பரமத்தி, ப.வேலுார் வழியாக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, நேற்று மதியம், 12:00 மணிக்கு சென்றடைந்தது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தைப்பூசத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
அனைத்து காவடிகளும் சென்ற பின், கடைசியாக கந்தம்பாளையம் அருகே உள்ள பிராந்தகத்தில், சுப்பிரமணிய சுவாமி செல்வது வழக்கம். அதேபோல், நேற்று பிராந்தகம் சுப்பிரமணியர் சுவாமி காவடி கடைசியாக சென்றது. இந்த காவடியை வழிபட்ட பின், பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

