ADDED : பிப் 15, 2025 01:54 AM
'சிட்கோ'வில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல்:நாமக்கல், திருச்செங்கோடு, வேட்டம்பாடி, ராசாம்பாளையம் உள்ளிட்ட, நான்கு இடங்களில், 'சிட்கோ' தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்பேட்டைகளில், 120 மேம்படுத்தப்பட்ட தொழில்மனைகள், 49 தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட்டு, 105 மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள், 49 தொழிற்கூடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் தொழிற்பேட்டை, 1979ல், 10.09 ஏக்கரில் தொடங்கப்பட்டு, 23 மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள், 24 தொழிற்கூடங்களுடன் செயல்பட்டு வருகிறது.
இத்தொழிற்பேட்டையில் காலணி தயாரித்தல், இன்ஜினியரிங், லாரி பாடி கட்டுமான பணிகள், நுாலிழைகள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து, கலெக்டர் உமா, நாமக்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்கள் குறித்த விபரம், ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் விபரம், நிறுவனத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

