ADDED : பிப் 18, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழாய் உடைந்து குடிநீர் வீண்
மல்லசமுத்திரம்:எலச்சிபாளையம் யூனியன், குமரமங்கலம் பஸ் ஸ்டாப்பில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில், குடிநீர் குழாய் உடைந்துள்ளது. தண்ணீர் திறந்து விடும்போதெல்லாம், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் தேங்கி காணப்படுகிறது.
குமரமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குறைவான தண்ணீர் கிடைக்கிறது. வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்லும்போது, நடந்து செல்பவர்கள் மீது தண்ணீரை வாரி இறைத்து செல்கின்றனர். எனவே, குடிநீர் குழாய் உடைப்பை, விரைந்து சரிசெய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

