/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீர்வரத்து குறைவால் குடிநீருக்கு அபாயம்
/
நீர்வரத்து குறைவால் குடிநீருக்கு அபாயம்
ADDED : பிப் 18, 2025 01:34 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை நீர்தேக்க பகுதியில், 10 கி.மீ., துாரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்த தண்ணீரில் மின் உற்பத்தி நடக்கும். மேலும், ஓடப்பள்ளி தடுப்பணை நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கத்தில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீரும் தற்போது குறைந்து வருகிறது. இதனால் நீர்தேக்க பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணியாளர் கூறியதாவது:
பள்ளிப்பாளையம் ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்க பகுதியான ஆவத்திபாளையம் பகுதியில் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, களியனுார், பள்ளிப்
பாளையம் அக்ரஹாரம், காடச்சநல்லுார், ஓடப்பள்ளி உள்ளிட்ட பஞ்., பகுதிக்கும், திருச்செங்கோடு நகராட்சி பகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில நாட்களாக ஓடப்பள்ளி தடுப்பணை பராமரிப்பு பணிக்காக, நீர்தேக்க பகுதியில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் குடிநீருக்கு வரும் தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து பற்றாக்குறை இல்லாமல் மக்களுக்கு வழக்கம் போல வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

