/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உயர்மட்ட பாலத்தில்மின்விளக்கு அவசியம்
/
உயர்மட்ட பாலத்தில்மின்விளக்கு அவசியம்
ADDED : பிப் 19, 2025 01:45 AM
உயர்மட்ட பாலத்தில்மின்விளக்கு அவசியம்
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, அக்கரைப்பட்டி கிராமம், திருமணிமுத்தாற்றின் குறுக்கே, சில ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் வழியாக, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் இரவு, பகல் பாராமல் சென்று வருகின்றனர். ஆனால், அந்த பாலத்தில் இதுவரை மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் வழிப்பறி சம்பவம் நடக்குமோ என்ற அச்சத்திலேயே பாலத்தை கடந்து செல்கின்றனர். குறிப்பாக, மாலை நேரத்தில் வேலை முடிந்து செல்லும் பெண்கள், டியூசன் முடிந்து செல்லும் மாணவ, மாணவியர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், உயர்மட்ட பாலத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

