/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதர்மண்டிய நிழற்கூடம்சுத்தம் செய்ய கோரிக்கை
/
புதர்மண்டிய நிழற்கூடம்சுத்தம் செய்ய கோரிக்கை
ADDED : பிப் 20, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதர்மண்டிய நிழற்கூடம்சுத்தம் செய்ய கோரிக்கை
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை யூனியன், மெட்டாலா அருகே, செல்லியம்பாளையம் கிராமம் உள்ளது. ஆத்துார் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
காலை, மாலை என பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த நிழற்கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழை காரணமாக நிழற்கூடத்தை ஒட்டி முள்செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளன.
இதனால் நிழற்கூடத்தில் குழந்தைகள் பெண்கள், காத்திருக்க தயங்குகின்றனர். எனவே நிழற்கூடத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்ற வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

