/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கவுண்டம்பாளையத்தில்'அட்மா' திட்டத்தில் பயிற்சி
/
கவுண்டம்பாளையத்தில்'அட்மா' திட்டத்தில் பயிற்சி
ADDED : பிப் 20, 2025 01:35 AM
கவுண்டம்பாளையத்தில்'அட்மா' திட்டத்தில் பயிற்சி
மல்லசமுத்திரம்:வேளாண் துறை சார்பில், 'அட்மா' திட்டத்தின் கீழ், எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட, 67 கவுண்டம்பாளையம் கிராமத்தில் நேற்று, 'பண்ணை இயந்திரமயமாக்குதல் மற்றும் புதிய இயந்திரங்களை பிரபலப்படுத்துதல்' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது. இதில், 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா அவர்கள் தலைமை வகித்து வேளாண்மைத்துறை சார்ந்த மத்திய மாநில திட்டங்கள், விவசாயிகளுக்கு தனி குறியீடு வழங்கும் முகாம் நடைபெறுதல் பற்றி கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
வேளாண் உதவி பொறியாளர் தீபா, வேளாண்மை பொறியியல்துறை சார்ந்த மானியத் திட்டங்கள் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு கூறி விளக்கமளித்தார். திருச்செங்கோடு மகேந்திரா நிறுவன அலுவலர் கலந்துகொண்டு புதிய வேளாண் இயந்திரங்கள, செயல்பாடுகள் மற்றும் மானியங்கள் பற்றி விரிவாக கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர் அவர்கள் அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் வாசுகி உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடுகள் பற்றியும் கூறினர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை, அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். மேலும், கிராமப்புற அனுபவ பயிற்சிக்காக, எலச்சிபாளையம் வட்டாரத்திற்கு வருகைப் புரிந்திருக்கும் நாமக்கல் பி.ஜி.பி., -வேளாண்மை கல்லுாரி மாணவர்கள், 10 பேர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தனர்.