ADDED : பிப் 22, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக தாய்மொழி தினஉறுதிமொழி ஏற்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில், உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் நளினிசுரேஷ்பாபு, 'எங்கும் தமிழ், எதிலும், எப்போதும், தமிழ் என்ற நடைமுறையை கொண்டு வர பாடுபடுவோம்.
தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட பரப்பரை செய்வோம். இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம்' என, உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் பின்தொடர்ந்து கூறி, உறுதிமொழியை ஏற்றனர்.
உணவுத்துறை அதிகாரிகள்

