தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் விழா

கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் விழா

கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் விழா


ADDED : மார் 03, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கருப்பண்ணார் கோவிலில் பொங்கல் விழா

நாமக்கல்:நாமக்கல், காமராஜ் நகர், தில்லைபுரத்தில் கருப்பண்ணார் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெள்ளாயி பொங்கல் நிகழ்ச்சி நடக்கும்.

அதன்படி, நேற்று வெள்ளாயி பொங்கல் விழா நடந்தது. காலை, 7:30 மணிக்கு, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர்.

பின், நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தம், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மதியம், 2:00 மணிக்கு பொங்கல் பானை அழைத்தல், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

இன்று மதியம், 1:00 மணிக்கு மறு பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us