ADDED : மார் 06, 2025 01:40 AM
தெருநாய்களால் மக்கள் அச்சம்
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, 18 வார்டுகளில் மூன்றில் ஒரு பங்கு, நகர் பகுதியில் உள்ளது. இங்கு, 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாமகிரிப்பேட்டையில், அரியாகவுண்டம்பட்டி ரோடு, சேனியர் தெரு, நடுவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அரியாகவுண்டம்பட்டி ரோட்டில் கறிக்கடைகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள கழிவுகளை சாப்பிட்டுவிட்டு சாலையிலேயே உலாவுகின்றன. இதனால், நாய்கள் மீது டூவீலர்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
சில சமயம், இந்த வழியாக செல்லும் குழந்தைகளை கடித்து விடுகின்றன. இதனால், குழந்தைகள், பெரியவர்கள் இவ்வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த, டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.