/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
/
மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
ADDED : மார் 13, 2025 01:45 AM
மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
ப.வேலுார்:-ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்திய அரசை கண்டித்து, ப.வேலுார் அண்ணாதுரை சிலை முன், தி.மு.க., சார்பில், நேற்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
தி.மு.க., நகர செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார். இதில், மும்மொழி கொள்கை, தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காதது, தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கண்டிப்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். நாமக்கல் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் கண்ணன், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை தலைவர் மகில் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.