/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமகிரிப்பேட்டையில்சிறுவர் பூங்கா திறப்பு
/
நாமகிரிப்பேட்டையில்சிறுவர் பூங்கா திறப்பு
ADDED : மார் 15, 2025 02:30 AM
நாமகிரிப்பேட்டையில்சிறுவர் பூங்கா திறப்பு
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, வேலவன் நகரில், 'அம்ருத்' திட்டத்தில், 29லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். செயல் அலுவலர் ஆறுமுகம், டவுன் பஞ்சாயத்து தலைவர் சேரன், துணைத்தலைவர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கும்பக்கொட்டாய் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை, எம்.பி., திறந்து வைத்தார். கவுன்சிலர் சுரேஷ் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களிடம், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கேள்வி கேட்டு, பதில் கூறியவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.