தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : மார் 15, 2025 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்:'வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைவாய்ப்பு கிடைக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களின் துயரை துடைக்கும் வகையில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வீதம், மூன்றாண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது.

இதேபோல், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இனி வரும் காலங்களில், மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 600 ரூபாய், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், பத்தாண்டு காலத்திற்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற, வரும் ஏப்., 1 முதல் ஜூன், 30 வரை, காலாண்டிற்கு, மேற்கண்ட கல்வி தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டு முடிவுற்ற பதிவுதாரர்கள், ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர். தகுதியுடையவர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு, அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் செல்லலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us