ADDED : மார் 18, 2025 01:36 AM
அ நிறம் | அளவு
அரசு கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு
நாமக்கல்:நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி, இயற்பியல் துறை சார்பில், 'இயற்பியல் பயிலும் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்ப துறையில் உள்ள வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். துறை தலைவர் சின்னுசாமி முன்னிலை வகித்தார். சிங்கப்பூர், பன்னாட்டு நிறுவன ஆலோசகர் பொருளாதார இயக்குனர் பெரியசாமி காளியண்ணன், வேலைவாய்ப்பு திறன்கள் என்ற தலைப்பில்
பேசினார்.தொடர்ந்து, கல்லுாரி முன்னாள் மாணவர் கோபிநாத், 'தகவல் தொழில் நுட்பத்துறையில் எனது பயணம்' என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் சேதுபதி, இயற்பியல் துறையின் இளம் அறிவியல், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவியர் உள்பட, 100க்கு மேற்பட்டோர்
பங்கேற்றனர்.
