/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வணிக வரியை நிறுத்தி வைக்கவிசைத்தறியாளர்கள் கோரிக்கை
/
வணிக வரியை நிறுத்தி வைக்கவிசைத்தறியாளர்கள் கோரிக்கை
வணிக வரியை நிறுத்தி வைக்கவிசைத்தறியாளர்கள் கோரிக்கை
வணிக வரியை நிறுத்தி வைக்கவிசைத்தறியாளர்கள் கோரிக்கை
ADDED : மார் 18, 2025 01:37 AM
வணிக வரியை நிறுத்தி வைக்கவிசைத்தறியாளர்கள் கோரிக்கை
திருச்செங்கோடு:நகர பகுதிகளில், வீடுகளில் குடிசை தொழிலாக சிறு விசைத்தறி தொழில் செய்பவர்களுக்கு, நகராட்சி மூலம் வணிக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி, நகராட்சி தலைவர், நகராட்சி கமிஷனரிடம், விசைத்தறியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்செங்கோடு நகர பகுதிகளில் செயல்படும் சிறு விசைத்தறி கூடங்களை வகைப்படுத்தப்பட்டு, வீடுகளில் வைத்து செயல்படும் சிறு விசைத்தறி கூடங்களுக்கு, தமிழக அரசு வணிக வரியை அதிகரித்தது.
இதை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்த நிலையில் தற்காலிகமாக வரிவிதிப்பை நிறுத்தி வைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும், ஏற்கனவே சில வீடுகளில் உள்ள சிறு விசைத்தறி கூடங்களுக்கு வணிகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசிடம் பழைய வரியே விதிக்க உத்தரவு பெற்று வரும் வரை, வரி கட்ட கால அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.