/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டாஸ்மாக்கில் முதல்வர் படம்பா.ஜ.,வினர் மீது வ
/
டாஸ்மாக்கில் முதல்வர் படம்பா.ஜ.,வினர் மீது வ
ADDED : மார் 20, 2025 01:56 AM
டாஸ்மாக்கில் முதல்வர் படம்பா.ஜ.,வினர் மீது வழக்கு
ராசிபுரம்:பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியதை போல், டாஸ்மாக் கடை சுவரில், பா.ஜ., நிர்வாகிகள், 'அப்பா மதுபான கடையில் ரூ1,000 கோடி ஊழல்' என அச்சிடப்பட்ட, முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய போட்டோவை ஒட்டி வருகின்றனர்.
நேற்று, ஆண்டகலுார்கேட் டாஸ்மாக் சுவரில், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் ஹரிஹரன், ஒன்றிய செயலாளர் விஜயசரஸ்வதி, மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா ஆகியோர், முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர். தகவலறிந்து வந்த ராசிபுரம் போலீசார், பா.ஜ., நிர்வாகிகள், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
* குமாரபாளையம் பா.ஜ., சார்பில், சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் கடை சுவரில் முதல்வர் படம் ஒட்டிய நகர தலைவி வாணி, நகர மகளிரணி தலைவி தேவகி, நகர பொதுச்செயலர் சுரேஷ்குமார், நகர செயலர் சண்முகராஜ் ஆகிய, நான்கு பேரை, குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.