/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வானவில் மன்றம் சார்பில்ஆசிரியர்களுக்கு அறிவியல் மாநாடு
/
வானவில் மன்றம் சார்பில்ஆசிரியர்களுக்கு அறிவியல் மாநாடு
வானவில் மன்றம் சார்பில்ஆசிரியர்களுக்கு அறிவியல் மாநாடு
வானவில் மன்றம் சார்பில்ஆசிரியர்களுக்கு அறிவியல் மாநாடு
ADDED : மார் 20, 2025 01:58 AM
வானவில் மன்றம் சார்பில்ஆசிரியர்களுக்கு அறிவியல் மாநாடு
நாமக்கல்:நாமக்கல் வானவில் மன்றம் சார்பில், மாநில அளவில் மேற்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கான அறிவியல் மாநாடு நடந்தது. நாமக்கல், வேலுார், புதுக்கோட்டை, மதுரை என, நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மாநில அளவிலான ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு, குமாரபாளையம் எக்ஸல் கல்லுாரியில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்(பொ) குமார் தலைமை வகித்தார். மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் விளக்க உரை ஆற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், மாநில தலைவர் திருநாவுக்கரசு, மாநில கருத்தாளர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் கைலாசம், சேலம் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் செங்குட்டுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாமக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய, எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 127 ஆசிரியர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த கட்டுரைக்கு, அறிவியல் புத்தகங்கள்
பரிசளிக்கப்பட்டன.