/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை பொருள் தடுப்பு, மனநலவிழிப்புணர்வு கருத்தரங்கம்
/
போதை பொருள் தடுப்பு, மனநலவிழிப்புணர்வு கருத்தரங்கம்
போதை பொருள் தடுப்பு, மனநலவிழிப்புணர்வு கருத்தரங்கம்
போதை பொருள் தடுப்பு, மனநலவிழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : மார் 21, 2025 01:32 AM
போதை பொருள் தடுப்பு, மனநலவிழிப்புணர்வு கருத்தரங்கம்
நாமக்கல்:சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில் நடந்த, ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு சமுதாய சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சூரிய
பிரகாஷ் பங்கேற்று 'போதை பொருள் தடுப்பு மற்றும் மனநல விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசினார். அதில், வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மனம் ரீதியான
பிரச்னைகள், போதை பொருள் பழக்கத்தினால் ஏற்படும் உடல் பாதிப்பு, சமூக மற்றும் குடும்ப பிரச்னைகள் குறித்தும், இந்த பழக்கத்திலிருந்து வெளியேறி, ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டு மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ் கண்ணன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வெஸ்லி, கல்லுாரி போதை பொருள் தடுப்பு குழு உறுப்பினர் ராஜ்குமார், பல்வேறு துறையை சார்ந்த துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார்.